5 ஜனவரி, 2014

முன் வினைபயன் மற்றும் மறுவாழ்வு



மறுஉலக வாழ்வு பற்றிய என் கருத்துக்களை நான் வெளியிட்ட பின்னர், பல கேள்விகள் என் முன் வைக்கப்பட்டன. இந்த கட்டுரையில் அதற்கான பதில்களை தர முயற்சித்துள்ளேன். இதுவே இந்த தலைப்பு குறித்தான இறுதியான கட்டுரையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். காரணம், நான் இஸ்லாம் குறித்தான தலைப்புகளுக்கே செல்ல விரும்புகிறேன்.
முஸ்லிம்களும் மறுஉலக வாழ்வு உண்டு என கூறுகின்றனர். நாம் அவர்களை ஒத்துக் கொள்வதில்லை, சரிதானே? நம்மைப் பொறுத்தவரை அது எந்த அடிப்படையையும் கொண்ட ஒன்றில்லை.
மறுஉலக வாழ்வு இருக்கிறது என்று நிருபிப்பதற்கு போதுமான அளவு சாட்சியங்கள் உள்ளன.   “கடவுளையும் மறுஉலக வாழ்வையும் இப்போது ஏன் நான் நம்புகிறேன்என்ற என் கட்டுரையில், சரிபார்த்து அறிந்துகொள்ளக்கூடிய NDE (இறப்பின் அருகே அனுபவிக்கும் அனுபவம்) அனுபவங்களை தந்துள்ளேன். நான் எப்போதெல்லாம் அது போன்ற காணொளிகளை மேலும் காண்கிறேனோ, அப்போதெல்லாம் மேற்கொண்டு அதை இங்கே இணைத்திடுவேன். சாட்சியங்கள் மீது தான் அறிவியல் கட்டப்பட்டுள்ளது. சாட்சியங்களை மறுதலித்தால் நாம் அறிவியலை மறுதலிக்கிறோம்.


உண்மை என்னவெனில் மறுஉலக வாழ்வு உண்டு என்று முஹம்மது சொன்னது, அவரை உண்மையாளர் ஆக்காது. அவருடைய காலத்தில் அனைவருமே மறுஉலக வாழ்வு உண்டு என்றே நம்பினர். , மக்களை முட்டாளாக்கி திறமையாக கையாள இந்த நம்பிக்கையை அவர் ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார்.
ஏன் அனைவருக்கும் இந்த NDE அனுபவம் ஏற்பட்டு, அந்த அனுபவத்தை இந்த உலகுக்கு அறிவிக்கவில்லை?
நூற்றுக்கும் மேற்பட்ட NDE அனுபவங்களின் மீது நடத்தப்பட்ட ஆராய்சிகளின்படி, சுமார் ஐந்துபேரில் ஒருவருக்கு NDE அனுபவம் ஏற்படுகிறது. ஏன் மற்ற அனைவருக்கும் ஏற்படவில்லை என்பது ஆராய்சியாளர்களுக்கு புதிராகவே இருக்கிறது. இருப்பினும், சிலருக்கே ஆன்மா இருக்கிறது என்றும் பலருக்கு ஆன்மா இல்லை என்றும் நாம் கருதி விடமுடியாது.
நீங்கள் முன்வினைப்பலன்(Karma) பற்றி குறிப்பிடவில்லை. முன்வினைப்பலன் இல்லை என்றால் நீதியில்லை.
முன்வினைப்பலனின் கோட்பாடு என்னவெனில், இந்த ஜென்மத்தில் நீங்கள் தீமை செய்தால், மறு ஜென்மத்தில் நீங்கள் தாழ்ந்த குடியிலோ அல்லது அதனினும் கீழான ஒரு விலங்காகவோ பிறந்து, இந்த பிரபஞ்சத்திற்கு அளிக்க வேண்டிய உங்கள் கடன்களை கொடுத்து தீரும் மட்டும்  ஒரு பரிதாபகரமான வாழ்க்கை உங்களுக்கு விதிக்கப்படும் என்பதாகும்.
அன்னை தெரசாவை அன்பு செய்வதைப் போலவே வெகுஜன கொலைகாரர்களான ஸ்டாலின் மற்றும் ஹிட்லர் இருவரும் அன்பு செய்யப்படுவார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்களா?
ஆம், கடவுள் வேற்றுமை பாராட்டுவது இல்லை. அவர் அனைவரையும் ஒன்றாகவே நேசிக்கிறார். ஏன், அவர் மனிதர்களை நேசிக்கும் அதே அன்பில்தான் விலங்குகளையும் மரங்களையும் நேசிக்கிறார். அன்பு செய்வதே அவரது இயல்பு. அன்புசெய்வதைத்தவிரஅவரால்வேறுஒன்றும்செய்யமுடியாது.
ஆனால்ஆம், ஒரு பெரியஆனால்மிஞ்சி இருக்கிறது. கடவுளிடம் நியாயத்தீர்ப்பு என்ற ஒன்று இல்லாவிட்டாலும், ஒவ்வொரு சிந்தனைக்கும் சொல்லுக்கும் மற்றும் செயலுக்கும் எவ்வித தண்டனையும் கிடையாது என்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நீங்கள் உங்கள் கைகளை நெருப்பில் வைத்தால், தீக்காயம் ஏற்படுகிறது. யாரும் வந்து உங்களைத் தண்டிக்க வில்லை. இயற்பியல் சட்டத்தை நீங்கள் மீறியதற்கான விலையாக அந்த தீக்காயத்தை பெற்றீர்கள். அதேபோன்று எப்போதெல்லாம் நாம் ஆன்மீக சட்டத்தை மீறுகிறோமோ அப்போதெல்லாம் நம்முடைய செய்கைகளுக்கான விளைவுகளை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். நாம் இயற்பியல் சட்டத்தை மீறும்போது அதன் விளைவு உடனடியாக நடப்பதைப் போன்றே, இதுவும் உடனடியாக நடைபெறுகின்றது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், இந்த உலகத்தை விட்டு செல்வதுவரை நாம் இது பற்றி அறிவது இல்லை.
இந்த காணொளியில் உள்ள நபர் நமது செய்கைகளுக்கான பலன் என்ன என்பதை விளக்குகிறார். மக்களின் நிலை என்ன?
நமது தனித்துவம் என்பது ஒரு மாயை. கருப்பொருளில் நாம் அனைவருமே ஒன்று தான். உங்கள் கைகளின் விரல்களைப் பாருங்கள். நீங்கள் அதன் அடிபாகத்தை மறைத்தால், அவை அனைத்தும் பிரிந்து தனித்துவமானதாகத் தோன்றும். ஆனால் அவை அனைத்தும் ஒரே கையின் விரல்களாகும். உடம்பில் ஏதாவதொறு பாகம் காயம் அடைந்தால், உடம்பின் அனைத்து உறுப்புகளும் அந்த காயத்தின் வேதனையை அனுபவிக்கிறது. உடலும் ஆன்மாவும் இணைந்து நாம் அமையப் பெற்றிருக்கிறோம்கடவுளை துண்டுகளும் துணூக்குகளுமாக பிரித்ததே நம் அனைவரின் ஆன்மாவாகும். மேலும் இந்த பிரபஞ்ஜமானது ஒற்றை எலக்ட்ரானால் ஆனது என்று சொல்கின்ற ஒரு தத்துவம்(theory) இருக்கிறதுதுகள்களால் இரண்டாகவோ அல்லது முடிவற்ற எல்லையில்லா இடங்களிலோ ஒரே நேரத்தில் இருக்க முடியும். அப்படியென்றால், நீங்களும் நானும் மற்றும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒரே துகளினால் ஆனதாகும். எனவே, ஒரே மூலத்தில் இருந்து நமது ஆன்மா மட்டும் வரவில்லை. உடல் ரீதியாகவும்கூட நாம் அனைவரும் ஒன்றுதான். இப்போது நாம் இருக்கும் இந்த தளத்திலிருந்து அனைத்தும் ஒன்று என்ற தத்துவத்தை நம்மால் காண முடியாது. எப்போது நாம் இங்கிருந்து கடந்து மறுஉலகத்திற்குள் நுழைகிறோமோ, அப்போது மற்றவர்களுக்கு நாம் செய்த அனைத்தும், நமக்கே செய்தோம் என்ற அனைத்தையும் காண்கிறோம். மற்றவர்களுக்கு நீங்கள் அளித்த எல்லா வேதனைகளும் எல்லா சந்தோசங்களும் ஒன்றும் கூடாமல் ஒன்றும் குறையாமல் நூறு சதவீதம் உங்களுக்கே திரும்ப வந்து சேரும். காலம் எனும் பரிமாணம் அற்றதாய் மறுஉலகம் இருப்பதால், நித்தியமும் கணநேரமும் ஒன்றாகி விடுகிறது. எனவே, இந்த உலகத்தில் மற்றவர்களுக்கு நீங்கள் அளித்த வேதனை சிறிது நேரமே நீடித்து இருப்பினும், மறுஉலகத்தில் நீங்கள் அதை நித்தியமாக அனுபவிப்பீர்கள்.
அத்துடன் முன்வினைபயன் என்பது  காரணமும்-விளைவும் (cause and effect) என்ற கோட்பாடையும் அடிப்படையாக கொண்டது.
நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனை என்ற வடிவமாக முன்வினைபயன் இருக்கிறது. முன் ஜென்மத்தில் செய்த பாவங்களுக்காக வேதனையடைய இந்த உலகத்திற்கே மறுபடி நாம் திரும்ப அனுப்பப்பட்டால், அது தண்டனையாகும். நமது செயலுக்கான விளைவு உடனுக்குடன் நடந்துவிடுகிறது. ஆனால் மறுஉலகவாழ்வில் அந்த திரைசீலை விலகும்போதுதான் நம்மால் அதை அறிந்து கொள்ளமுடிகிறது.
முன்வினைப்பயன் என்ற தத்துவத்தில், மேலும் ஒரு முரண்பாடுஉள்ளது. ஒருவர், அவர் என்ன குற்றம் செய்ததிற்காக தண்டனை அனுபவிக்கிறார் என்று சொல்லாமல் தண்டிக்கப்படுகிறார். அது அநிதீயாகும். சில மதங்கள் நம்புவதுபோல் இந்த உலகம் ஒரு பள்ளிக்கூடமென்றால், என்ன விதமான பாடங்கள் நாம் படிக்க வேண்டும் என்று கட்டாயம் அறிவுறுத்தப்பட வேண்டும். என்ன விதமான பாடங்களை எதற்காக எப்படி படிக்க வேண்டும் என்று நமக்கு சொல்லாமல், அனைத்தையும் எவ்வாறு நாம் கற்க முடியும். அதற்காக அன்பே உருவான ஒரு கடவுள் எப்படி நம்மை தண்டிக்கமுடியும்?
முன்வினைப்பயன் என்பது ஒரு தவறான சித்தாந்தமாகும். மேலும் அனைத்து தவறான சித்தாந்தங்களைப் போன்றே இதுவும் தீமையானதாகும். வேதனை அடைபவர்களின் நிலையை இது அலட்சியப்படுத்துகிறது. அதிர்ஷ்ட மற்றவர்கள் அவர்களுக்கான பலனைப் பெறுகிறார்கள் என்று அது முன்னூகிக்கிறது.
தவறான நம்பிக்கைகள் எப்போதும் ஆபத்தானவை. ஒரு தத்துவம் சமூகத்திற்கு நன்மை பயப்பதாக இருந்தால், அது உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இது தீங்கு விளைவிக்கும் என்றால் அது மிக உறுதியாக பொய்யானது. ஒரு தத்துவம் உண்மையா? பொய்யா? என்பதை அறிய இது அநேகமாய் ஒரு சிறந்த அளவு கோளாகும். உதாரணத்திற்கு, வெறுப்பு மற்றும் போரை ஊக்குவிக்கும் இஸ்லாம் போன்ற, ஒரு தத்துவம் பொய்யானதாகத்தான் இருக்க வேண்டும். முன்வினைப்பயன் தீண்டாமையையும் தாழ்ந்த குடியையும் ஊக்குவிக்கிறது.
உங்கள் கஷ்டங்கள் தெய்வீகமாக நியமிக்கப்பட்டதென்று நீங்கள் நம்பினால், வாழ்க்கையை மேம்படுத்த கடுமையாக போராட வேண்டும் என்ற உங்களது அறிவாற்றல் தவறிப்போய்விடும். இந்தியாவின் முன்னேற்றத்தை முட்டுக்கட்டை செய்த மிகபெரும் கொள்ளை நோய் ஜாதீயமாகும்(casteism). இது முன்வினைப்பயன் என்ற தத்துவத்தின்மேல் நம்பிக்கை கொண்டதால் விளைந்தது.
நாம் இந்த உலகத்திற்கு தண்டனையை அனுபவிப்பதற்காகவோ ஒரு பாடம் கற்பதற்காகவோ அல்லது ஒரு முஸ்லீம் சொல்வது போல் சோதிக்கப்படுவதற்காகவோ வரவில்லைநம் ஆன்மா கடவுளின் ஒருபடைப்பு அல்ல. அது கடவுளின் ஒரு பகுதியாகும். அது உருவாக்கப்படவோ அல்லது களங்கப்படவோ இல்லை. தண்ணீரை மாசடைய செய்வதுபோல் அந்த ஆன்மாவையும் மாசடைய செய்யலாம். ஆனால் மிகவும் மோசமாக மாசுபட்ட தண்ணீரைக்கூட அதன் அசலான தூய்மை நிலைக்கு கொண்டு வர நம்மால் முடியும்நம் ஆன்மா விஷயத்திலும் இது உண்மை தான்.
கடவுளிடம் உள்ள அனைத்தும் நம்மிடம் உள்ளது. உங்கள் உடலைப்பற்றி சிந்திக்கவும். நீங்கள் சில 100 டிரில்லியன் உயிரணுக்களால்(cells) செய்யப்பட்டுள்ளீர்கள். ஒவ்வொரு செல்லிலும் உங்களைப் பற்றிய அனைத்தும் வரையப்பட்டுள்ளது. உங்களின் மொத்த வடிவும் ஒவ்வொரு செல்லிலும் கலந்துள்ளது. அதே போன்றே கடவுளின் அனைத்தும் ஒருவரில் கரைந்துள்ளது. ஒவ்வொரு ஆன்மாவும் கடவுளின் பிம்பமே.
கடவுள் அறிந்திருக்கின்ற அனைத்தையும் நாமும் அறிவோம். நாம் இந்த இயற்பியல் வடிவில் இருக்கும்போது அவை அனைத்தும் நமக்கு மறைக்கப்பட்டுள்ளது. இந்த உலகில் நாம் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்கிறோம். காய்ந்த தரையில் இருக்கும் ஒரு தண்ணீர் மூலக்கூறை போல் நாம் இருக்கிறோம். மகா சமுத்திரத்திலிருந்து வந்த நமக்கு அது பற்றிய நினைவுகள் நம்மிடம் இல்லை. ஆனால் நாம் எப்போது நம் மூலத்தை அடைகிறோமோ, அப்போது நாம் அதுவாகவே ஆகிறோம். அப்போது அனைத்து அறிவும் நமக்கு நினைவு படுத்தப்படுகிறது. கடவுளைப் பற்றிய அறிவை நினைவுப்படுத்துவது என்பது, மற்ற அனைத்து ஆன்மாக்களோடும் ஐக்கியமாவது என்பதாகும். இந்த பிரபஞ்சத்தோடு அனைத்தும் ஒன்றே என்பதை மறு கண்டுபிடிப்பாக கண்டுபிடிப்பது போன்றதாகும்.
நாம் கற்றுக்கொள்வதற்காக இந்த உலகிற்கு வரவில்லை என்றால், பின் வந்த நோக்கம்தான் என்ன?
நாம் நமது இருப்பை(existence) அனுபவிக்கவே இங்கு வந்துள்ளோம். விஷயங்கள் அவற்றின் எதிர்பதத்தால் மட்டுமே அறியப்படுகிறது. ஈரத்தன்மையை அனுபவிக்க வறட்சி இருக்க வேண்டும். உயரத்தை அனுபவிக்க குள்ளம் இருக்கவேண்டும். வெளிச்சத்தை அனுபவிக்க இருள் அவசியம். எனவேதான் நாம் ஜீவாத்மாவை அனுபவிக்க கடவுள்(பூரண அறிவுநிலை மற்றும் பூரணஅறிவற்றநிலை) என்ற இந்த இரு துருவங்களைப் படைத்துள்ளார். இந்த உலகத்தில் உள்ள நூறு வருடத்தை நித்தியத்தோடு ஒப்பீடு செய்யும்போது அவை ஒன்றுமே இல்லை. அதுவே நமது உண்மையான வயதுதாகும்.
நாம் அதை அனுபவிப்பதற்காக இந்த உலகத்திற்கு வந்தால், ஏன் இவ்வளவு பாடுகள் இருக்கிறது?
நாம், நமது சவால்களை தேர்வு செய்கிறோம். ஆனால் அவற்றின் விவரங்களை விட்டுவிடுகிறோம். இந்த பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள முடிவதில்லை. இந்த பொருள் உலகானது Heisenberg கின் நிச்சயமற்ற கோட்பாட்டுக்கு(uncertainty principle) உட்பட்டது. நம் மீது என்ன வாய்ப்பு எறியப்படுகிறதோ அதை எதிர்கொண்டு, வாழ்வின் சவால்களை சமாளித்து வாழ்வதற்காக நாம் இங்கு வந்துள்ளோம். நம் வாழ்வின் நோக்கம் பிரச்சனைகளை போராடி வென்று வாழ்கையை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்பதாகும்.
எதையும் எளிதாக கொள்வதற்காக நாம் இங்கே வரவில்லை. நமது வீடு சொர்கத்தில் உள்ளது. அங்கே அனைத்தையும் நாம் நமது நினைவுகளால் கட்டமைத்துக் கொள்ளலாம். அங்கே அனைத்துமே எளிதானதுநம்மை நாமே சவால் விடுவதற்காகவே, நாம் இங்கே வருவதற்கு முடிவெடுத்தோம்.
மறுஉலகைப் பற்றி பேசும் போதெல்லாம் உவமைகளை கொண்டு எளிதாக நாம் கையாள்கிறோம். இயேசு மிக அதிகமாக உவமைகளை பயன்படுத்தினார். நானும் ஒன்றை எய்கிறேன். நீங்கள் உங்கள் வீட்டில் மிக வசதியாக வாழ்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு மென்மையான படுக்கையில் உறங்குகிறீர்கள். நீங்கள் விழிக்கும்போது வெந்நீர் குளியல். குளிசாதனப்பெட்டியில் இருந்து நீங்கள் விரும்புவதை எடுத்து உங்கள் அடுப்பில் சமைக்கிறீர்கள். அப்போது உங்கள் காபி சமைக்கும் இயந்திரம் உங்களுக்கு ஒரு அருமையான காபி காய்ச்சுகிறதுஉங்கள் காலை உணவு மேஜையில் உங்களுக்கு விருப்பமான புதிதான பழங்கள் இருக்கின்றன. வாழ்க்கை நன்றாக மற்றும் எளிதாக உள்ளது. ஆனால் நீங்கள் ஏதாவது கொஞ்சம் கிளர்சியை விரும்புகிறீர்கள். எனவே நீங்கள் ஒரு முகாமில் தங்க தீர்மானிக்கிறீர்கள். நீங்கள் வனப்பகுதிகளில் ஒரு கூடாரம் அமைக்கிறீர்கள். நீங்கள் தரையிலே, உறக்கப் பைகளில் தூங்குகிறீர்கள். கொசுக்கள் உங்களை கடித்து உயிரைவாங்கும்போதே காட்டாற்றின் குளிர்ந்த தண்ணீரிலே குளிக்கிறீர்கள்நீங்கள் கூடி,வேட்டையாடி அல்லது மீன்பிடித்து நெருப்பு உண்டாகி அதை சமைத்து சாப்பிடுகிறீர்கள்.
ஏன் உங்களது வாழ்க்கையை மிகவும் கடினமானதாக செய்கிறீர்கள்? மேலும் சிலர் இன்னும் அதிகமாக சென்று மலைமேல் ஏறுகிறார்கள். இரக்கமற்ற வெப்பநிலை மற்றும் நிலப்பகுதிகளில், தங்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள். ஏன் சுகவாசியானஒருவர், இப்படிப்பட்ட காரியங்களை செய்யவேண்டும்.? அவர்கள் என்ன பைத்தியங்களா? சவால்கள் நமக்கு பிடிக்கும் என்பதால்தான். அதனால்தான் நாம் இந்த உலகத்திற்கு வந்தோம். ஒருவர் மீன்பிடிக்க செல்வதை தேர்ந்தெடுப்பதைப்போல், வேறொருவர் எவரெஸ்ட் மலை ஏறுவதை தேர்ந்தெடுப்பதைப்போல். இந்த உலகத்தில் நாம் சந்திக்கப்போகும் சாவால்களின் தரத்தை நாமே தேர்ந்தெடுக்கின்றோம். பூவுலக வாழ்வு எனும் யோசனையே இப்படிப்பட்ட சாவால்களை எவ்வாறு மேற்கொள்வது என்பதே.
இது ஒரு உவமையாக உள்ளது. வாழ்க்கை என்பது ஒரு சுற்றுலாவோ அல்லது முகாமில் தங்குவது போன்றோ அல்ல. நம்முடைய வாழ்வில் ஒரு நோக்கம் இருக்கிறது. இராணுவ சேவை ஒருவேளை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கலாம். அவர்கள் இராணுவத்தில் அதன் துன்பங்களையும் மற்றும் ஆபத்துக்களையும் பற்றி அறிந்திருந்தாலும்கூட வீரர்கள் தானாகவே முன்வந்து இராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களின் சேவையில் ஒரு நோக்கம் உள்ளது. நம்முடைய வாழ்க்கைக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. இறுதியில் நாம் அதை கண்டுபிடிப்போம். நான்15 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய பிறப்பின் நோக்கத்தை கண்டு கொண்டேன். 9 வயதில் மிக உயரத்தில் இருந்து நான் தவறி விழுந்தபோது மருத்துவர்கள் நான் பிழைப்பது மிக கடினம் என்று என் பெற்றோரிடம் கூறிவிட்டனர். அதில் தப்பிப்பிழைத்து மனித குலத்தில் உள்ள என் சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாம் பற்றிய உண்மைகளை கற்பிக்கவே இந்த உலகத்திற்கு நான் வந்தேன் என்றும் அதுவே என் பிறப்பின் நோக்கம் என்றும் நான் கண்டு கொண்டேன். 15 வருடத்திற்கு முன்புவரை நான் இதை அறிந்திருக்கவில்லை. அதன் பின்பும்கூட இஸ்லாமை இந்த உலகில் இருந்து ஒழித்துக்கட்டுவதற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. இப்போது நான் கடவுளைக் கண்டுகொண்டேன். என் வாழ்க்கையில் நடந்த என் தோல்விகள், வெற்றிகள் மேலும் என் துன்பங்கள் எல்லாம் இந்த பணிக்காக என்னை தயார் செய்ததை என்னால் இப்போது காணமுடிகிறது. 15 வருடங்களுக்கு முன் இந்த பாதையை நான் தேர்ந்தெடுத்தேன் என்று எண்ணினேன். இல்லை, நான் பிறப்பதிற்கு முன்பே நான் இதை தேர்ந்தெடுத்து விட்டேன்.
ஏன் இங்கு இருக்கிறார்கள் என்று சிலருக்கு தெரியும். அவர்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவிப்பார்கள். மற்றவர்களும் அதை சந்தோசமானதாக அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதைத்தான் மற்றவர்கள் தவற விடுகிறார்கள். அவர்கள் ஏமாற்றி காயப்படுத்தி மற்றும் அக்கிரமமாய் நடக்கிறார்கள். சாகசம் முடிந்தவுடன் இந்த மக்கள் ஒரு முரட்டுத்தனமாக எழுப்புதல் அடைந்து, விட்டிற்கு திரும்ப அழைக்கப்படுவார்கள். நிச்சயமாக அங்கே அவர்களுக்கு தண்டனை கிடையாது. ஆனால் பச்சாதாபமும் வருத்தமும்(remorse) உண்டாகும். வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்ற தங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பை தவறவிட்டதிற்க்காய் அவர்கள் வருந்துவார்கள்.
மேலும் ஒரு உதாரணத்தை நான் கூறுகிறேன். இருட்டில் நீங்கள் ஒருவனை சந்தித்து, அவனை அடித்துக் கொன்று விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவன் உங்களை மிதித்ததற்க்காகவோ அல்லது நீங்கள் அவனை கொள்ளையடிக்கவோ ஏதோ ஒன்று. நீங்கள் யாரும் பார்க்கவில்லை என்று சந்தோசமாக உங்கள் வீட்டிற்கு ஓடி விடுகிறீர்கள். சில மணிநேரம் கழித்து, காவல் நிலையத்தில் இருந்து உங்களுக்கு ஒரு அழைப்பு வருகிறது. காவலர் உங்களிடம் யாரோ ஒருவர் உங்கள் அப்பாவை அடித்துக் கொன்றுவிட்டார் என்கிறார்கள். நீங்கள் இனி எப்போதும் சந்தோசமாக இருப்பீர்களா? உங்களுக்கான தண்டனையை நீங்களே தேடமாட்டீர்களா?
எவற்றையெல்லாம் நாம் மற்றவர்களுக்கு செய்தோமோ, அவற்றை நாம் நமக்கே செய்தோம். நாம் எப்போது இந்த உலகை விட்டு செல்கிறோமோ அப்போதுதான் நாம் இதை அறிகிறோம். மனசாட்சி இல்லாமல் மக்கள் இங்கே வாழ முடியும். மறுஉலகில் அது முடியாது.
ஒரு NDE அனுபவ குறிப்பில், ஒரு பெண் கூறுகிறார், சொர்கத்திற்க்குள் நுழையும் முன் அவர் இரண்டு வேறுவேறான நரக வாயிர்க்கதவுகளைக் காண்கிறார். முதலில் நெருப்பு எரிகின்ற இடத்தைக் காண்கிறார். அங்கே மிகக் தீமையான ஆன்மாக்கள் ( முஹம்மது மற்றும் ஹிட்லரைப் போன்றதாக நான் கருதுகிறேன்) தீயில் கருகுகின்றன. பின் அவர் அடுத்த வாயிர்க்கதவுக்கு கடந்து செல்கிறார். இது ஒரு பாழான தனித்து விடப்பட்ட இடம். அது சிவப்பு வானத்தையும் நீண்ட நிழல்களையும் கொண்டுள்ளது. தங்கள் அருகில் யார் இருக்கிறார்கள் என்றுகூட அறிய முடியாத அளவிற்கு தங்கள் சுயநினைவுகளால் உறிஞ்சப்பட்ட மனிதர்களால் அந்த இடம் நிறைக்கப்பட்டிருந்தது. அவர்கள் முகங்கள் சோகத்தினாலும் வருத்தத்தினாலும் நிறைந்து இருந்தது. அவருக்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்தது என்று அவர் கூறுவது என்னவென்றால், இந்த இரண்டு நரக வாயிர்க்கதவுகளும் மிகப்பெரியதாய், நரகத்தில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் விதமாய் முழுவதும் திறந்து இருந்ததுதான். ஆனால் அங்கிருந்த எந்த ஆன்மாவும் அங்கிருந்து தப்பித்து செல்ல முயற்சி செய்யவில்லை. தன் மொத்த வாழ்வையும் காண்பித்து விட்டு, சொர்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்ல தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டதென்று மற்றொரு NDE நிகழ்வில் வேறொருவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்நான் சொர்கத்திற்கு செல்ல தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் நான் சொர்கத்திற்கு சொந்தமானவன் இல்லை என்று அறிந்திருந்தேன் என்கிறார்.
மறுஉலகைப் பற்றி நான் கற்றதில் இருந்தும் புரிந்துகொண்டதில் இருந்தும், நமது தண்டனையை நாமே தீர்மானிக்கிறோம் என்று அறிந்து கொண்டேன். அங்கே ஆன்மாக்கள் இங்கே நாம் பேசிக்கொள்வது போல் பேசுவதில்லை. ஒருவருக்கொருவர் அடுத்தவர்களின் மனதை வாசிக்கிறார்கள். ஆம், அங்கே அந்தரங்கம் இல்லை. நம் அனைவரின் நினைவுகளும் நம் அனைவரின் மொத்த வாழ்வும் அனைவருக்கும் தெரியப்படுத்தப்படுகிறது. இங்கே நாம் ஒரு கேவலமான குப்பைத் துண்டாக இருந்தாலும் நம் நினைவுகளை இங்கே மறைக்க முடியும். நாம் பரிசுத்தமானவன் போல் நடிக்க முடியும். அதற்கு அங்கே வாய்ப்பே இல்லை.
இதை நான் கற்றுக்கொண்டபின், நான் உணர்ந்தது என்னவென்றால் எல்லோரின் மனத்தையும் எல்லோரும் வாசிக்க முடியும் என்றால் இந்த உலகமும் ஒரு சொர்கமாக மாறிவிடும் என்பதாகும். இங்கே நாம் ஒருவரை சந்திக்கும்போது, அவர்களை சந்தித்ததால் பெருமகிழ்ச்சி அடைந்ததுபோல் ஒரு பொய்யான சிரிப்பை நம் முகத்தில் வைக்கிறோம். ஆனால் உண்மையில் நம் அடிமனதில் நாம் அவர்களின் தைரியத்தை வெறுத்து அவர்களை ஏமாற்றுகிறோம். எல்லோரும் எல்லோரின் மனதை அறிந்து கொள்ளமுடியும் என்றால், தீய சிந்தனை செய்ய ஒருவரும் துணிய மாட்டோம். ஒரு NDE கூறியது போல் சொர்க்ககுடியுரிமை கொண்டவர்கள் அனைவரும் அனைவரையும் அன்பு செய்கிறோம் என்று சொன்னது ஆச்சரியம் அல்ல. ஆனால் நிச்சயமாக உலக மக்கள் அனைவரும் அனைவரின் சிந்தையையும் காணமுடியும் என்கின்றபோது எப்படி பல்வேறு எண்ணங்கள் இருக்க முடியும்?

- அலிசினா(Ali Sina)

மொழியாக்கம் : அந்தோணி(Antony)