30 அக்டோபர், 2013

மக்களின் கேள்விகளுக்கு அம்மன் அருளால் பதில்-வீடியோ பதிவு


கர்நாடகா மாநிலத்தின் தசாரிகாட்டா  [Dasarighatta] என்னும் சிறிய கிராமத்தில் உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் . பொது மக்களுக்கு தங்களின் குடும்பத்தை பற்றிய கேள்விகளுக்கு

அம்மன்அருளால் பதில்கள் அரிசி மாவு பரப்பப் பட்ட ஒரு பலகையில் எழுதி காண்பிக்க படுவதாகவும். எழுதக்கூடிய அம்மனின் சப்பரத்தை பிடித்து கொண்டிருக்கும் இருவருக்கும் எழுத படிக்க தெரியாது என்றும் 

 ஸ்டார் டிவியில் நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சியில் காண்பிக்கபட்டது.

அதன் வீடியோ பதிவு கீழே கொடுக்க பட்டுள்ளது. 

மேலும் நேரில் காணவேண்டும் என்ற ஆர்வத்தில் 16-2-2014 அன்று அங்கு சென்று பார்த்து வந்த செல்வன். பார்த்திபன் தீபு அவர்களின் அனுபவம்.


                                                           




கர்நாடகா மாநிலத்தில் தும்கூர் மாவட்டத்தில் உள்ள திப்தூர் என்ற ஊரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது தசாரிகட்டா என்ற கிராமம்.

திப்தூரிலிருந்து தாசரிகட்டா செல்வதற்கு உடனடி தேவைக்கு  ஆட்டோவில் மட்டுமே செல்ல முடியும். கட்டணம் ரூ.100/- மட்டுமே.

பெங்ளூரிலிருந்து பஸ் மூலம் அந்த கோவிலை அடைய மூன்று மணி நேரம் ஆனது.
                             

அங்கு கோவிலில் நாம் நமக்குண்டான கேள்விகளை கேட்க உட்காருவதற்கு

கட்டணமாக ரூ.100/- வசூலிக்கபடுகிறது. மேலும் எலும்மிச்சம்பழம் 2 வாங்கி செல்ல வேண்டும்.

நாம் பலகைக்கு எதிரில் உட்கார்ந்தவுடன். அம்மன் சப்பரமேல் முனையை நமக்கு காட்ட அதை தொட்டு கும்மிட சொல்கிறார்கள். பின் கேள்விகளை நினைத்து கொள்ள சொல்கிறார்கள்.

பின் அந்த அரிசி மாவு பரப்பபட்ட பலகையின் மேல் அந்த சப்பர நுனியை வைக்கிறார்கள்.









                         








நாம் நினைத்த கேள்விக்குண்டான பதில்கள் கன்னட எழுத்தில் வருகிறது. கன்னடம் எழுத படிக்க தெரிந்தவர்கள். படித்து கொள்ளலாம். நாம் படித்தவுடன் அதை நாம் அழித்து விட்டால் அடுத்து நாம் நினைத்திருக்கும் கேள்விக்குண்டான பதிலை எழுதி காண்பிக்க படுகிறது. எதுவும் பேசாமல் நாம் அழிக்க அழிக்க அடுத்தடுத்த கேள்விகள் எழுதி காட்டபடுகிறது.

நமக்கு கன்னட எழுத்து தெரியாததால் கன்னடம் தெரிந்த அங்கிருந்த மற்றவர்களை வைத்து அர்த்தம் கேட்டு தெரிந்து கொண்டோம். கேள்விகளுக்கு ஆம், இல்லை என்ற பாணியில் இல்லாமல் தெளிவான நாம் கேட்கும் கேள்விக்குண்டான பதில் கிடைத்தது. ஆச்சரியமான விசயம் தான். பதில் படி சரியாக நடக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

[Reaching Dasarighatta:
Dasarighatta is about 10 kms from Tiptur. One can reach Tiptur via Tumkur from Bangalore. There are plenty of busses ply to Tiptur from Bangalore city. Also you can reach Tiptur by train. Dasarighatta is around 5km from railway station. From Bus stand, Auto driver will charge Rs 100/- for one way. Also city buses are available to reach Dasarighatta- Thanks To Mr. Thiyaga Rajan A - in KDC- Fb.  Dt. 17-2-14 ]




தசாரிகட்டா வுக்கு 28-6-2014 சனிக்கிழமை அன்று  KDC FB நண்பர்களான செல்வன் KVS அருள், செல்வன். கிரி சோமு மற்றும் திரு. குமரானந்தன் அவர்களின் பயண அனுபவங்கள்








செல்வன் KVS அருள், செல்வன் கிரி சோமு

இவர்களின் கருத்து
தசாரிகட்டா செளடேஸ்வரியம்மன் அருள்வாக்கு
நாம் அங்கு வரும் பக்தர்களிடம் விசாரித்தோம் அம்மன் கூறும்
அருள்வாக்கு நமக்கு நடக்கிறதா என்று .

அவர்களுடைய பதில் அம்மன் அருள்வாக்கு சொல்வது அப்படியே நடக்கிறது என்று பதில் கிடைத்தது .

அவர்கள் கூறியதாவது நாம் செளடேஸ்வரி அம்மனை தினமும் பிரார்திக்க வேண்டும் எனவும் 
செவ்வாய்க்கிழமை & வெள்ளிக்கிழமை காலை மாலை தவறாமல் தீபம் ஏற்றி 

அம்மா செளடேஸ்வரி உன்னை தான் நான் நம்பி இருக்கிறேன்.  நீ தான் என்னை காக்க வேண்டும் என்று பக்தியுடன் செளடேஸ்வரியை நினைத்து கும்பிட்டு வர வேண்டும் . அப்படி கும்பிட்டு வர நம் கஸ்டங்கள் அம்மன் அருளால் விலகி அம்மன் சொன்ன நேரத்தில் நம் காரியம் ஜயம் ஆகிறது என்று அங்கு வந்து இருந்த பக்தர்கள் கூறினர்
 .
பலருக்கும் அவர்களின் கஸ்டங்கள் அம்மன் சொன்ன காலத்திற்குள் தீர்ந்து நலமாக இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.

திரு. குமரானந்தன்.

இவர் கூரிய கருத்து.
எனக்கு கன்னட எழுத்து தெரியாது. தமிழில்  எழுதி காட்ட முடியுமா என்று கேட்டேன். முடியாது கன்னடத்தில் தான் எழுத்து வரும் என்று சொன்னார்கள். சரி என்று உட்கார்ந்தேன். 
கேள்வியை கேட்க சொன்னார்கள்.எனக்கு ஒன்றும் புரியவில்லை மனதில்தானே நினைத்து கொள்ள முன்பு சொன்னதாக கேள்வி பட்டேன் இப்பொழுது கேட்க சொல்கிறார்களே என்று கேள்வியை ஒவ்வொன்றாக கேட்டேன்.
அவர்கள் சப்பரத்தை பிடித்து கொண்டு எழுதினார்கள். அவர்களே பதிலும் சொன்னார்கள். நான் கேள்வி கேட்பதும் அவர்கள் எழுதி விட்டு பதில் சொல்வதுமாக இருந்தது. 
ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மாதத்தில், ஆறு மாதத்தில், ஒரு வருடத்தில் சரியாகி விடுவதாக சொன்னார்கள்.பின் சாங்கியம் பண்ண வேண்டும் என்று சொல்லி அருகில் உட்கார சொன்னார்கள்
நமக்கு சப்பரத்தை பிடித்து பதில் சொன்னவர்கள். சாங்கியம் செய்வதற்கு 10,15 பேர் சேர்ந்தவுடன் சாங்கியம் செய்ய அவர்களை அழைத்து கொண்டு செல்கிறார்கள்.
அப்பொழுது அடுத்த இரண்டு பேர் வந்து சப்பரத்தை எடுத்து கொண்டு மற்றவர்களுக்கு சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
சாங்கியம் :- அனைவருக்கும் ஒரே மாதிரிதான் செய்கிறார்கள். இதற்கு ரூபாய் 200/- செலுத்த வேண்டும். இதற்கு ரூபாய் 50/- க்கு  ரசீது தருகிறார்கள். விபரம் கேட்ட போது கோவிலுக்கு 50 ம் 150 சாங்கியம் செய்து கொடுப்பவர்களுக்கும் என்று சொன்னார்கள்.
 இரண்டடிக்கு இரண்டு அடி சதுரம் வரும்படி சிறிய சொம்பை நான்கு மூலைக்கு ஒன்றாக நான்கு வைத்து நூல் கயிற்றால் சதுரம் வரும்படி சுற்றி வைத்திருக்கிறார்கள். சாங்கியம் செய்பவர்களை அதனுள் நிற்க சொல்லி இரண்டு எலும்மிச்சம் பழத்தை நான்காக அருத்து நான்கு பக்கமும் போடுகிறார்கள். பின் ஒரு வாழை கன்று ஒன்றை அருகில் வைத்து அதை வெட்ட சொல்கிறார்கள். அவ்வளவுதான் சாங்கியம் முடிந்தது.

இதில் மேலும் விஷேசம் என்ன வென்றால்  சப்பரத்தை அவர்கள் வெளி இடத்திற்கும் எடுத்து செல்கிறார்கள். எதற்காகவென்று விசாரிக்க முடிய வில்லை.


சில பட காட்சிகள்:-































வீடியோ பதிவு