27 டிசம்பர், 2012

தேவாங்கர் குல வரலாறு -முதல் பகுதி


 நமது இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும், ஒவ்வொரு மரபினருக்கும் அவர்களது வம்சாவழியைக் குறித்து ஆன்றோர்களால் செய்யப் பெற்ற புராணங்கள் ஆங்காங்கு ஒளிர்கின்றன. அவர்களது தோற்றங்கள் யாவும் கடவுளர்களை ஆதியாகக் கொண்டே தொடங்குகின்றன.  அந்த முறையிலேயே இத்தேவாங்க புராணமும் அமைகின்றது.

 இந்த தேவாங்க புராணம் வடமொழியில் உள்ள பிரமாண்ட புராணத்தில் முதன் முதலில் தோன்றுவதாயிற்று.  அதனை ஆதியாகக் கொண்டு காலப்போக்கில் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய பல்வேறு மொழிகளில் இப்புராணம் தோன்றி வளர்வதாயிற்று.
  
 பதினெண் புராணங்களில் ஒன்றான பிரமாண்ட புராணத்தின் உத்தரகாண்டத்தில் தேவாங்கபுராணம் என்னும் பகுதி காணப்படுகிறது அதன் சுருக்கம்

              தேவாங்கர்களின்  முதல் வித்தான தேவலர் தோற்றம் 

 தேவர்களின் வேண்டுகோளின் படி அனைவருக்கும் ஆடைகள் தயாரித்துக் கொடுப்பதற்காக  சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணில் இருந்து (இதயக்கமலத்திலிருந்து என்றும் சொல்வர் ) தேவலரை தோன்ற செய்தார் (பின்னாளில் தேவாங்கன் என்று பெயர் பெற்றார்) சிவபெருமான்  அவரிடம் நீ திருமாலிடம் சென்று அவரிடம் உள்ள உந்திகமல நூலை பெற்று ஆடைகள் நெய்து அனைவருக்கும் அளிப்பாயாக மேலும்  நீ  ஆமேதநகருக்கு சென்று ஆட்சி செய்து கொண்டிருப்பாயாக  என்று அருளினார்.

           தேவாங்கர்களின் குல தெய்வமான சௌடேஸ்வரி தோற்றம் 
.
 தேவலர் சிவபெருமான் ஆணைப்படி ஸ்ரீ நாராயணணிடம் சென்று அவரிடம் நுழை பெற்று வந்துகொண்டிருந்தார் .வரும் வழியில் அசுரர்கள் அவரிடம் இருந்து நுழை அபகரிக்க எத்தனித்தனர். இதனால் அங்கு ஒரு பெரிய போர் ஏற்பட்டது  தேவலர் ஶ்ரீ நாரயண் கொடுத்த சக்கர ஆயுதத்தால் அவர்களிடம் போராடிப் பார்த்தார் அவர்களை வெட்டவெட்ட  சிந்திய இரத்தத்திலிருந்து எண்ணில் அடங்கா அசுரர்கள் தோன்றி போரிட்டனர்.  ஏதாவது ஆபத்து என்றால் என்னை அழை  என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்த அன்னை பரமேஸ்வரியை தேவலர்  எண்ணி துதித்தார்.





 தேவலர் அழைத்தவுடன் பரமேஸ்வரியும் அவரின்  நிலைமையை அறிந்து சூரியபிரகாசம் பொரிந்திய கிரீடம் தரித்தவராய் சிங்க வாகனத்தில் சூலாயுதபாணியாய் அங்கு தோன்றி ஆவேசத்துடன் அசுரர்களை தாக்கினார். அவர்களின் உடம்பிலிருந்து சிந்திய இரத்தத்தை கீழே சிந்த விடாமல் சிங்கம் குடிக்க அசுரர் படைகள் யாவும் மடிந்தன. தேவலர் காபாற்றப்பட்டார். ஒளி பொரிந்திய கிரீடத்தைத் தாங்கியிருந்ததால் சவுடநாயகி (சௌடேஸ்வரி அம்மன் )ஆனார் .

                                               அமாவாசையின் சிறப்பு 
.    
 சௌடேஸ்வரி அம்மன் தேவலரிடம் இன்று ஆடி அமாவாசையன்று நான் உனக்காக தோன்றியதால் எனக்கு இன்று பிறந்த நாளாகும் நான்  உன் உயிரை காத்ததால் உனக்கும் இந்த நாள் பிறந்த நாள் ஆகும். ஆகவே அமாவாசை நாட்களில் நீயும் உன் குல மக்களும் என்னை நினைத்து வழிபாடு செய்தால் எல்லா நன்மைகளையும் பெறுவீர்கள். தேவாங்கர்களுக்காகவே நான் இந்த அவதாரம் எடுத்து வந்ததால் தேவாங்கர் குல மக்கள் எப்பொழுது அழைத்தாலும் நான் வந்து உங்கள் குறைகளை தீர்த்து வைப்பேன் என்று சொல்லி மறைந்தார்

                                                        தேவலரின் ஆட்சி 

 சகர நாட்டின் தலைநகரான ஆமேதநகரை அரசாட்சி செய்து கொண்டு ஆடைகள் நெய்து அனைவருக்கும் அளித்து சிவபெருமான் இட்ட கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார் தேவலர் .

                                                              பருத்தி செடி 

 தேவலர் தன் சந்ததியரும் தொடர்ந்து ஆடைகள் தயாரிப்பதற்கான  நுலுக்காக திருமாலிடம் வேண்ட திருமாலும் மானி, அபிமானி என்னும் இருப்பெண்களை உலகத்திற்கு அனுப்பி  அவர்களை பருத்தி செடியாக முளைக்கும்படி செய்தார்.

 தேவலர் தன் தலைமுறையில்  வந்தவர்களுக்கு மகனாக மீதியுள்ள ஆறு பிறப்புகள் பிறப்பெடுத்து ஆமேதநகரை ஆட்சிசெய்து சிவபெருமான் இட்ட கட்டளைகளை அனைத்தும் நிறைவு செய்தார்.

 தேவலர் . 18 ம் தலைமுறையில் தேவதாச மையனாக பிறப்பெடுத்தார். ஶ்ரீசெளடேஸ்வரி அம்மனை கோவிலில் எளுந்தருள செய்வதற்காக,  விரதம் இருந்து வழிபட்டார்.  சௌடநாயகியோடு   சிவபெருமானும் இராமலிங்கராக வந்து கோயில் கொண்டு எழுந்தருளி  அருள்பாலிப்பதாக வரத்தை பெற்றார். பின் ஆமேத  நகரில் கோயில் கட்டினார்  (இராமலிங்க நாதன் எனத் திருநாமம் சூட்டி ) இராமலிங்கசௌடேஸ்வரியை பக்தியுடன் வழிபட்டு கயிலை அடைந்தார்.


                               கோத்திரங்களும் குலங்களும் உருவான விதம் 



 பின் வந்த தலைமுறைகளில் காளசேன மன்னனுக்கு மக்கட்பேறு இல்லை. பல நாட்டு மன்னரின் மகள்கள் 10,000- பேரை மணந்தான் யாருக்கும் மக்கட்பேறு இல்லை. கவுதம முனிவரின் உதவியால் புத்திரகா மேட்டி யாகம் செய்தார் அதில் அமிர்தம் கிடைத்தது.  அந்த அமிர்தத்தை உண்டு 10 ஆயிரம் மனைவிகளும் 10 ஆயிரம் மக்களை பெற்றனர்

 10 ஆயிரம் மக்களும் 700 முனிவர்களால் பால் சிவதீட்சை பெற்றனர். தீட்சை அளித்த முனிவர்களின் பெயர்கள்  700 கோத்ரங்களாக ஆயின. 10 ஆயிரம் மக்களும் 10ஆயிரம் குலங்களாக ஆகி  தங்கள் குலங்களை பெருக்கினர் .



                    தேவாங்கர்களின் சமூக கட்டுபாடுகளின் தோற்றம்.


  காளசேன மன்னன் இந்த 10ஆயிரம் பேரில் மூத்தவனான ரூபசேனமன்னனுக்கு முடிசூட்டி ஆட்சியை ஒப்படைத்தான் .இவர் வழியில் வந்த ஏகோராமன் என்னும் விருபாட்சன்  சமுககட்டுப்பாடுகளையும்  ஒழுக்க நியதிகளையும் வகுத்தான்.  சமுக கட்டுபாட்டுக்காக சிம்மாசன பீடாதிபதிகளையும், ஆசாரசீலம்,  தெய்வவழிபாடு முதலியன ஒழுங்காக நடைபெறப் பீடாதிபதிகளையும் நியமித்தான்.

 இந்த அமைப்புகளின் வழி, நெறி முறைகளைத் தேவாங்ககுல மக்கள் இன்று வரை பின்பற்றி வருகின்றனர்.

 தேவாங்க மக்கள் உள்ள எல்லா இடங்களிலும் அம்மனுக்குக் கோவில் இருக்கும் ஆந்திரம், கர்நாடகம், மகாராஸ்டிரம்,கேரளம், கலிங்கம், வங்கம் இங்கெல்லாம் சௌடாம்பிகை என்ற பெயரிலேயே கோயில்கள் இருக்கின்றன. 400 ஆண்டுகளுக்கு முன்பே தேவாங்கர்கள்  தமிழ்நாட்டில் இருந்ததாக பல கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது .

 தேவாங்கர் குலத்தில் சமயதுறைக்கும் சில அமைப்புகள் உள்ளன .அவை சிம்மாசனங்கள், குருபீடங்கள், மடங்கள்

   சிம்மாசனபதி பட்டங்களை, செட்டிமைகள் வழங்குவார்கள்

  குருப்பீடங்கள் புரோகிதர்களை நியமிப்பார்கள்

 மடத்துகுருக்கள் இளைங்கர்களுக்கு தீட்சை செய்து பூணுல் அணிவித்து உபதேசம் செய்வார்கள் .

 பழைய சிம்மாசனப்பீடங்களும், பழைய குருப்பீடங்களும் அழிந்தும் சிதைந்தும்  போயின

 தேவாங்கர்களுக்குள் குல விசேஷங்கள் நடத்துவதற்காகப் பரம்பரையாக சிலருக்கு  சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை

            1.  பட்டக்காரன்
            2.  நாட்டு  எஜமாணன்
            3.  செட்டிமைக்காரன்
            4.  எஜமானன்
            5.  குடிகள்

            என்பனவாகும்

 இம்முறைபபடியே தாம்பூல மரியாதைகள் நடைபெற்றன .சமூக மக்களிடையே நடக்கக்கூடிய முக்கிய சடங்குகளை நடத்த சமூகத்திலேயே புரோகிதர்களும் . கூட்டத்தில்  தாம்பூலம் வழங்க சேசராஜு என்பவர்களும் உள்ளனர்.

தேவாங்கர் வரலாறு முற்றும்.
.
                        ******************************************************
                      
தேவாங்கர்கள் சுப காரியங்களை தொடங்கும் முன் கங்கணம் கட்டுவது ஏன்?


 முதன் முதலில் தேவலர் தறியில் அமர்ந்து துணிகளை நெய்ய ஆரம்பிக்கும் முன் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனை தியானித்தார். அம்மனும்  அவர் முன் தோன்றி தன் கையில் இருந்த நவரத்ன கங்கணத்தை தேவலரின் கரத்தில் அணிவித்து "இனி எந்த காரியத்தையும் சுலபமாக முடிக்கும் ஆற்றலை பெறுவாய்" என்று ஆசீர்வதித்து மறைந்தார்.

  இதனை மனதில் கொண்டுத்தான் அனைத்து சுப காரியங்களுக்கும்.  ஆரம்பிக்கும் முன் அம்மனை நினைத்து கங்கணம் கட்டிக்கொள்கிறோம். கங்கணம் கட்டிக்கொண்டு ஆரம்பிக்கும்  செயல்களுக்கு எந்த இடையூறும் ஏற்ப்படாது.


 தேவாங்க குலத்தவர்கள் பூணூல் அணிவது ஏன்?
                                                  

 1.பிராமண தன்மை, வைத்திக காரியங்களுக்கு அனுமதி, சகல நன்மைகள், மற்றும் ஆத்மாவை பக்குவ படுத்துவது போன்றவைகள் ஏற்படும்.

 2. மனம், வாக்கு மற்றும் செய்கையில் தூய்மையுடன் இருக்க எந்நேரமும் நினைவு படுத்தி கொண்டிருக்கும். மனித குணங்களான சத்வ, ராஜஷ, தாமஸ குணங்களை ஞாபகபடுத்துகிறது.

3. தன் முன்னோர்களுக்கும், குருவிற்கும், தன் குடும்பத்தார்களுக்கும், தெய்வங்களுக்கும் செய்யும் கடமைகளை தனக்கு நினைவு படுத்தவும். காயத்ரீ மந்திரம் சொல்லக்கூடிய தகுதிக்காகவும்.

பூணூல் அணிய படுகிறது.

 சிவபெருமானின் நெற்றி கண்ணில் இருந்து வந்த தேவலர், தான் தோன்றும் போதே பூணூல் அணிந்த படி இருந்ததாக வரலாறு. அதன் காரணமாகவும் அவர் வழியில் வந்த தேவாங்கர்கள் பூணூல் அணிகின்றனர்.

ஒவ்வொரு முடிச்சிலும் மூன்று நுல்கள். மூன்று முடுச்சுக்களை சேர்த்து ஒன்பது நூல் கொண்டதாக போட்டுக்கொள்வது பூணூல். முடுச்சுகளை பிரம்ம முடுச்சு என்று சொல்வதுண்டு.

 பூணூல் வடிவிலே மூன்று பாதங்களுடைய காயத்ரீ தேவியே நமது உடம்பில் தங்கியிருப்பதாக அர்த்தம்.


பூணூல் அணியும் முறைகள் என்ன?


தேவாங்கர் குல மக்கள் வருடம் ஒரு முறை ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் பூணூல் நோன்பு என்று வைத்து பழைய பூணூலை மாற்றி புது பூணூல் அணிகிறார்கள்.

பிராமணர்கள், வைஸ்சியர்கள். மற்ற ஜாதியினர் திருவோண நட்சத்திரத்திற்கு அடுத்து  வரும் அவிட்ட நட்சத்திரத்தில் பூணூல் மாற்றும் நோன்பு வைத்து கொள்கிறார்கள்.

பூணூல் அணிந்திருப்பவர்கள் தினமும் சந்தியா வந்தனம் மந்திரம் சொல்ல வேண்டும். தேவாங்கர்களின் முதல் தோன்றலான தேவலர்.  யோனி பிறப்பில்லாத நெற்றி கண்ணிலிருந்து வந்த நேரடி பிறப்பாதலால். தேவாங்கர்களுக்கு சந்தியாவந்தனம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

 பூணூலை அணியும் போது குருவின் உபதேசம் பெற்று  அணிய  வேண்டும். முடியாத பட்சத்தில் அதற்கான மந்திரங்களை சொல்லி அணிய  வேண்டும்.

பூணூல் அணியும் போது சொல்லும் மந்திரம் 

ஓம்  சுக்லாம்  பரதரம்  விஷ்ணும்  சசிவர்ணம்
சதுர்புஜம்  பிரசன்ன  வதனம்  தியாகே
குருப்ரம்ஹ   குரூர்விஷ்ணு   குருதேவோ  மஹேஷ்வர
குருசாட்சாத்  பரப்ரம்ஹ   தஸ்மைஸ்ரீ   குருவே  நமஹ

 யக்ஞோபவீதம்  பரமம்  பவித்ரம்
 ப்ரஜோபதேர்யத்  சகஜம்  புரஸ்தாத்
 ஆயுஷ்ய  மஹர்யம்  ப்ரதிமுஞ்ச  சுப்ரம்
 யக்ஞோபவீதம்   பலமஸ்  துதேஜ.

என்று சொல்ல வேண்டும்.

பழைய பூணூலை கழற்றும் போது சொல்லும் மந்திரம்

உபவீதம்  பின்ன  தந்தும்  ஜீர்ணம்  கஸ்மல  தூஷிதம்
விஸ்ரு  ஜாமிபுனர்   பிரஹ்மன்   வர்ச்சோ  தீர்க்காயு  ரஸ்துமே.

                             

தேவாங்கர்களுக்கு காயத்ரீ தேவி  முக்கியமான தெய்வம் ஏன்?                                          

பிரம்ம தேவனின் பஞ்ச சக்திகள்
                         
                             1.  துர்கா தேவி
                             2.  ராதா தேவி
                             3.  இலட்சுமி தேவி
                             4.  சரஸ்வதி தேவி
                             5.  சாவித்திரி தேவி

 இவர்களின் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கடமைகள் பிரம்ம தேவனால் ஒப்படைக்கப்  பட்டிருக்கிறது.

 சாவித்திரி தேவி உயிர்களின் தாய், வேதங்கள், சந்தஸ்ஸீ,சந்தியா வந்தன  மந்திரம்,தந்திர சாஸ்திரங்கள் இவற்றிக்கெல்லாம் தாய்.  பிரும்ம சக்திக்கு அதிஸ்டான தேவதையாகவும் விளங்குபவள் அவளது பாததுளியால் உலகமெல்லாம் தூய்மை அடைகிறது

 பூணூலுக்கென ஓர் அதிதெய்வம் வேண்டும் என்ற எண்ணத்தின் உந்துதலால் பஞ்ச சக்திகளில் ஒருவரான  இந்த சாவித்திரி  தேவியை மூன்று பாதம் உடைய காயத்ரீ தேவியாக தேவர்களால் பூஜிக்கப்படும் தேவாங்க முனிவர் மாற்றினார்.

 மனிதரின் கண்டஸ்தானத்தில் பூணூல் வடிவில் நீ தேகத்தில் தங்கி நீ விளங்க வேண்டும்.  இதுவே உன் இருப்பிடம் என்று காயத்ரீ தேவியிடம் அருளினார். அன்று முதல் பூணூலின் மூன்று முடிச்சிற்கேற்ப மூன்று பாதங்கள் உள்ளவள் ஆனாள்

 சாவித்திரி தேவியே காயத்ரீ தேவியானதால், காயத்ரீ தேவி வேதங்களின் தாய். உலகை புனிதமாக்குபவள். இந்த காயத்ரீயே விஞ்ஞானம் எனப்படுகிறது.


 தேவாங்கர்கள் அனைவரும் தவறாது பூணூல் அணிய வேண்டும். பூணூல் வடிவிலே காயத்ரீ தேவியே நமது உடம்பில் தங்கியிருப்பதாக அர்த்தம்.


மந்திரத்தில் மகாமந்திரம் என்று சொல்லப்படும் காயத்ரீ மந்திரம் தேவாங்கர்களுக்கு அதிக உரிமை உண்டு ஏன்?

காயத்ரீ மந்திரத்தில் வேதங்கள் அனைத்தும் அடக்கம். பல விதமான மந்திரங்களை எல்லாம் சேர்த்துக் கூறினால் என்ன பலன் ஏற்படுமோ அந்த பலன் காயத்ரீ மந்திரத்தைச் சொன்னால் ஏற்படும். எனவே தான் இது மகா மந்திரம் என்று அழைக்கப்படுகின்றது. இம் மந்திரத்தை உபதேசித்தவர் தேவல மகரிஷி ஆவார். ஆகவே நம் தேவாங்கர்களுக்கு அதிக உரிமை உண்டு.

    காயத்ரீ மகா மந்திரம் :-  

                ஓம்    பூர்     புவஸீவ 


               தத்ஸ   விதுர்வ   ரேண்யம்  

                                                                                                                                                                                                                                                  
               பர்கோ    தேவஸ்ய    தீமஹீ 

               தி யோ    யோ ந    ப்ரசோதயாத் 


  பொருள் :-  ஒம்- பரப்பிரமம், பூர்- பூவுலகம், புவஹ- அந்தரிக்‌ஷி உலகம், ஸ்வ- சுவர்க்க உலகம், தத்- பரமாத்மா, ஸவிதுர்- ஜோதி வடிவான சக்தி, வரேண்யம்- வழிபடுவதற்க்குரிய தகுதி,  பர்கோ- அறியாமை மற்றும் பாவங்களை அகற்றும், தேவஸ்ய- தெய்வ சக்தியுடைய  ஞான ஸ்வரூபம், தீமஹீ- தியானித்து வணங்குகிறேன், தியோ - புத்தி,  யோ- எந்த , நஹ - எங்களுடைய [என்னுடைய ] ப்ரசோதயாத்- ஞானமடைய செய்யும்.

முழு பொருள்.

    பரப்பிரமம்மான  மூவுலகையும்  காக்கின்ற   சக்தியான  அந்த ஜோதி ஸ்வரூபத்தை வணங்குகிறேன். பேரொளியான அந்த ஜோதி ஸ்வரூப  சக்தி எனது புத்தியினை நல்வழியில் தூண்டட்டும். [அறிவை விரிவடைய செய்யட்டும்] என்பதாகும்.


 நீர் நிலையிலிருந்து கரகம் எடுப்பதும், கத்தி போடுவதற்கும் காரணம் என்ன?

செளடாம்பிகை அம்மனுக்கு ஶ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் என்ற பெயர் எப்படி வந்தது?


  தேவலர் ஏழாவது அவதாரமாக தன் . 18 ம் தலைமுறையில்,  தேவதாச மையனாக பிறப்பெடுத்து  விரதம் இருந்து வழிபட்டதால்,  ஶ்ரீசெளடேஸ்வரி அம்மன் ஆமேத நகரில் கோயில்கொண்டு எழுந்தருளி  அருள்பாலிப்பதாக சௌண்டம்மனிடம் வரத்தைப்  பெற்றார். தான் ஆட்சிபுரியும் ஆமேத  நகரில் சிறப்பான முறையில் பெரிய கோயில் கட்டினார்.

 தேவசாமையன் தன் குடிபடைகளுடன் தான் கட்டிய கோவிலுக்கு  அம்மனை அழைத்து செல்வதற்காக ஸ்ரீ சைலம் வந்தார். அங்கே அன்னை சௌடாம்பிகையை துதித்து வேண்டி மனம் உருகி நிற்க, அன்னை பிரசன்னமாகி காட்சி அளித்தாள். தாயே நீ ஏற்கனவே கொடுத்த வாக்குப்படி எங்களுடன் ஆமேத நகர் வந்து கோவிலில் குடி கொண்டு எங்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று தேவசாமையன் வேண்ட அன்னையும் அவ்வாறே ஆகட்டும் என்று கூறி ஒரு எச்சரிக்கை செய்கிறாள்.

 அதாவது "நீங்கள் எல்லோரும் முன்னால் நடந்து செல்லுங்கள். நான் உங்கள்  பின்னாடியே வருகிறேன். எந்த காரணத்தை கொண்டும் என்னை திரும்பிப் பார்க்க கூடாது. அப்படி திரும்பி பார்த்தால் அந்த கணமே அந்த இடத்திலேயே மறைந்து விடுவேன். அதன்பின் நீங்கள் எப்படி அழைத்தாலும் வர மாட்டேன்" என்றாள்.

 தேவசாமையனும் மற்றவர்களும் மகிழ்ச்சியுடன் முன்னே நடக்க பின்னால் அன்னை நடந்தாள்.  அவள் நடந்து வந்த போது காலில் இருந்து கொலுசுகள் சப்தம் ஜல் ஜல் என்று கேட்டது. அன்னை பின்னால் வருகிறாள் என்று மகிழ்ச்சியுடன் அனைவரும் நடந்தனர்.

 வழியில் ஒரு சிறிய ஆறு குறுக்கிட்டது. அதில் அனைவரும் இறங்கி நடந்தனர். பாதி தூரம் ஆற்றில் சென்றவுடன் திடீரென்று கொலுசு சத்தம் கேட்கவில்லை.  அன்னையின் எச்சரிக்கையை மறந்து கொலுசு சத்தம் கேட்கவில்லையே அன்னை வருகிறாளா தெரியவில்லை என்று ஆவலில் தேவசாமையன் திரும்பிப் பார்க்க அக்கணமே அன்னை நீரில் மறைந்தாள்.

 நீரில் நடந்து வரும் போது எப்படி கொலுசு சப்தம் கேட்கும். இதை மறந்து தவறுதலாக திரும்பி பார்த்து விட்டோமே அன்னை மறைந்து விட்டாளே என்ன செய்வது என்று மனம் வருந்தினார்.  தேவதாசமையனும் மற்ற குடிபடைகள் அனைவரும் அன்னை சௌடேஸ்வரியை பலவாறாக வருந்தி அழைத்தும் அன்னை பிரசன்னமாகவில்லை.

 தேவசாமையனுக்கு மனம் நடுங்கியது. மிகவும் வருத்தமும், அவமானமும் அடைந்து ஊருக்குச் செல்வதானால் அன்னையுடன் தான் செல்ல வேண்டும் இல்லையேல் உயிரை மாய்துக் கொள்வோம்  என்றுக் கூறி தன் இடையில் சொருகியிருந்த கத்தியை உருவி தன் மார்பிலும், கைகளிலும்  வெட்டிக் கொள்ள ஆரம்பித்தார்.  உடன் இருந்த குடி படைகளும், சேனை வீரர்களும் அவ்வாறே தங்களிடம் இருந்த கத்திகளால் வெட்டிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.  அன்னையின் திருநாமங்களைப் பலவாறாக கூறிக்கொண்டு கத்தியால் வெட்டிக்கொண்டே இருந்தார்கள். நீரெங்கும் ரத்தமாக மாறி ஆற்றில் ஓட ஆரம்பித்தது.  யாவரும் சளைக்காமல் கத்தி போட்டுக்கொண்டே இருந்தனர்.

 அன்னை மனம் பதை பதைத்து பதறி  " என் மக்களே இதோ வந்து விட்டேன் கத்தி போடுவதை நிறுத்துங்கள்" என்று கூறியபடியே பிரசன்னமானாள்.

 அனைவரும் அன்னையை வணங்கி நின்றனர். அன்னை " உங்கள் பக்தியை மெச்சினேன். கண்டிப்பாக நான் உங்களுடன் ஆமேத பட்டினம் வருகிறேன். இன்னோரு நல்ல நாளாக பார்த்து இதே இடத்திலிருந்து என்னை அழைத்துச்  செல்லுங்கள்" என்று வாக்களித்து மறைந்தாள். அனைவரும் ஸ்தம்பித்து போய் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது சிவபெருமான் தோன்றி நீங்கள் மீண்டும் வந்து செளடேஸ்வரியை அழைத்து செல்லுங்கள்.  நானும்  ராமலிங்கமாக கோவிலுக்கு வருகிறேன் இப்பொழுது வருத்தபடாமல் செல்லுங்கள் என்று கூறி மறைந்தார்.

 அவ்வாறே தேவசாமையனும் பின்னொரு நல்ல நாளில் அதே ஆற்றங்கரைக்கு வந்து அம்மனை அழைத்துச் சென்று கோவிலில் எழுந்தருளச் செய்தார்.  சிவபெருமானும் தன் வாக்குபடி இராமலிங்கராக அங்கு தோன்றியதால் அக்கோவிலின் அம்மன் ஶ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் என்ற பெயருடன் அழைக்கப்பட்டர்.

 இப்படியாக சௌடாம்பிகை அன்னையை தேவசாமையன் அழைத்து சென்ற நினைவை மறக்காமல் கொண்டாடு வதற்காகவே, கரகம் சிங்காரித்து அன்னை சௌடாம்பிகையாக பாவித்து கத்தி போட்டு அழைத்து செல்கிறோம். மேலும் அன்னை நீர் நிலையில் மறைந்து பின்னர் அங்கிருந்து தோன்றியதால் கரகம் சிங்காரித்து அழைத்து வருவதை ஏதாவது ஓரு நீர்நிலை அதாவது ஆறு, ஏரி, குளம் அல்லது கிணற்றடியிலிருந்து கரகம் சிங்காரித்து அழைத்து வருகிறோம்.

தேவுரு மனைக்காரு என்பது யார்? அவர்களுக்கு உள்ள சிறப்புகள் என்ன?

நான்கு ஸ்தலங்களின் அம்மன்கள்


நான்கு மனைகாரர்களின் அம்மன்கள்



முன் காலத்தில் தேவாங்க குல மக்கள் பெரிய யாகம் ஒன்று செய்திருக்கிறார்கள். அப்பொழுது,  யாகம் முழுமை அடைந்தால் தங்களுக்கு அழிவு ஏற்படும் என்று நினைத்த அசுரர்கள் அந்த யாகத்தை அழிக்க காற்றின் வேகத்தில் வந்திருக்கிறார்கள். அது சூறைகாற்றாகி யாகத்தில் குழுமியிருந்த மக்கள் பயந்து ஓடி இருக்கிறார்கள். அப்பொழுது யாகத்திற்காக வைக்கபட்டிருந்த 5 கலசங்களில் 4 கை நான்கு பேர் அதை காப்பற்றும் எண்ணத்தில் எடுத்து கொண்டு ஓடி தப்பித்திருக்கிறார்கள். அவர்கள் தான் தேவுரு மனைக்காரர்கள்.

இவர்களுக்கு உண்டான சிறப்புகள் :-  இவர்கள் வீடுகளில்   அம்மன் சிலைகள் வைத்து பூஜை செய்வதற்கும். அம்மனை நேரடியாக பார்த்து அம்மனுக்கு கைங்கர்யங்கள் செய்வற்கும். அம்மன் சந்நிதானத்திற்குள் நேரடியாக செல்வற்கும் தகுதி படைத்தவர்கள்.

ஆபத்தான  நேரத்திலும் யாகத்தின் கலசங்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அந்த நான்கு பேருக்கும் ஏற்பட்டதால். அவர்களை தொடர்ந்து அவர்களின் வழி வரும் குடும்பத்தார்களுக்கு தேவுரு மனைக்காரு என்று மரியாதையுடன் நடத்தபடுகிறார்கள்.

இன்னொரு விதமாகவும் கருத்து சொல்கிறார்கள்.

முஸ்லீம்களின் படை எடுப்பின் போது கோவில்களுக்கு முஸ்லீம்களால் பிரச்சனைகள் வந்தது. அந்த சமயத்தில் நான்கு குலத்தவர்கள் அம்மன் சிலைகளை பத்திரமாக பாதுகாத்தனர்.

சதானந்த மஹரிஷி கோத்திரம் - இருமனேரு
கௌசிக மஹரிஷி கோத்திரம்  - ஏந்தேலாரு
அகஸ்திய மகரிஷி கோத்திரம் - லத்திகாரரு
வரதந்து மகரிஷி கோத்திரம்   - கப்பேலாரு

அதற்குரிய  மரியாதைகளாக நான்கு நாள் திருவிழாவுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குலமக்கள் வீட்டு மரியாதை நடக்கும்.


இருமனேரு என்பவர்கள் தான் குலங்கள் உருவான அந்த 10000 பேரில் மூத்தவர் என்பதால் அவர்கள் தான் செட்டிக்காரர்கள். எந்த விழாவும் அவர்கள் குலத்தில் ஒரு ஆள் கலந்துக் கொள்ளாமல் நடக்காது


 தேவாங்கர் விழாவில் சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு, ஜோதி அழைப்பு வைத்து கொண்டாடுவது ஏன்?



அம்மன் சொன்ன வார்த்தையை மறந்து அம்மன் வருவதை சந்தேகபட்டு திரும்பி பார்த்ததால் அம்மன்  ஆற்றில் மறைந்தார்.  மக்களால் கத்தி போட்டு அழைத்த பின் அம்மன் மனமிரங்கி மீண்டும் வர சம்மதித்து வந்தார். அப்படி அழைத்து வரும் போது அம்மன் ரொம்பவும் பிகு செய்து கொண்டு மெது மெதுவாக ஒவ்வொரு அடியாக எடுத்து  வைத்து வந்தார்களாம்.

முதல் நாள் முழுக்க அம்மன் கால்வாசி தூரம் கூட வரவில்லை.  இரவு ஆகி விட்டது. மக்களும் அம்மனும் வழியிலேயே தங்கி கொண்டார்கள். மறுநாள் வேகமாக போக வேண்டும்  என்றஆசையில் அம்மனை குதிரை மேல ஏற்றி அழைத்து கொண்டு போனார்களாம். அப்படியும் ஊர் போய்ச் சேர முடியவில்லை. அன்று இரவு பயணத்தை நிறுத்தாமல் தொடர அம்மன் ஜோதியாக அனைவருக்கும் ஒளி கொடுத்து ஊர் வந்து சேர்ந்தார்களாம்.
இதை நினைவில் கொண்டுதான் முதல் நாள் சக்தி அழைப்பு, இரண்டாம் நாள் குதிரை மேல் சாமுண்டி அழைப்பு,  மூணாம் நாள் ஜோதி அழைப்பு என்று நீர் நிலைகளில் இருந்து அம்மனை அழைத்து கொண்டு கோவிலுக்கு வருகிறார்கள்.


சக்தி,சாமுண்டி,ஜோதி அழைப்புகளில் வீரமுட்டி வேஷம் போடுவது ஏன்?


சக்தி,சாமுண்டி,ஜோதி அழைப்பு என்பது சேலம் வட்டார பகுதிகளில் இருக்கிறது. வீரமுட்டி வேஷமும் போடுகிறார்கள். ஆனால் மதுரை சுற்று வட்டார பகுதிகளில். வீரமுட்டி வேஷம் என்பது இல்லை.

வீரமுட்டி வேஷம் என்பது வீரபத்திரர்  சாமியை குறிப்பது என்று சொல்லப்படுகிறது. இவர் அம்மனோட தளபதியாம். கத்தி போடும் வீர குமாரர்களுக்கு தலைவராம்

உயரமாக ஆஜானுபாகுவாக இருப்பவர்கள் 48 நாள் விரதம் இருந்து வீரமுட்டி வேஷம் போடுவார்கள்.

இவர் கையில் குழந்தையைக் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினால் குழந்தை வீரமாக வளரும் என்று  ஒரு நம்பிக்கை.

இவருடைய முக்கிய வேலைகள். கூட்டத்தை உற்சாகப்படுத்துவதும். யாராவது 
செருப்பு போட்டு கொண்டு இருந்தாலோ,  கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு 
இருந்தாலோ அவரை சாமி வரும் வழியில இருந்து அப்புறப்படுத்த வைப்பதும். 
முக்கியமாக சாமிக் கரகம் கொண்டு வருபவர் வழியில் தடை ஏற்பட்டு நின்று
விட்டால் தண்டகம் சொல்லி வீரகுமாரர்கள் அழைத்தும் சாமி முன்னே வர
வில்லை என்றால் போய் சாமியை அழைக்க வேண்டியதும் இவர் வேலைகள்.


                                   

ஆதாரம் :-  சேலம்  வைஷ்ணவக் கடல் புலவர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய நூலும்,

அருப்புக்கோட்டை திரு .Er. வெ. பால கிருஷ்ணன் அவர்கள் எழுதிய நூலும்

சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புன்செய்ப் புளியம்பட்டி-    
அவர்களின் வலைப் பதிவுகளும்.

மற்றும் தேவாங்கர் சமுதாயத்தவர்களின் பல வலை பதிவுகளும்.
                      

 இவர்கள்  நம் சமுதாயத்திற்கு செய்த தன்னல மற்ற சேவைகளுக்கு  வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன் - S.V. ராஜ ரத்தினம், கரூர்..

                                           ***************************

மட மனை, கெத்திகை மனை, தேவுரு மனை என்றால் என்ன?

மடமனை:- மடமனை என்பது தலைமைபீடம் என்று கூறுகிறார்கள்.
 .
கெத்திகைமனை:- ஏதேனும் ஒரு மடமனையில் இருந்து மண் எடுத்து சென்று வேறு ஒரு இடத்தில் தனியாக கோவில் கட்டி இருந்தால் அது கெத்திகை மனை.

கெத்திகை மனை எதற்காக உருவாகி உள்ளது என்றால் நீண்ட தூர பயணம் செய்து வழிபட முடியவில்லை என்றாலும் சில அண்ணன் தம்பிகளுக்குள் வேற்று கருத்து நிலவினால் இப்படி உருவாகிறது.
ஒரு மடமனை யில் தான் தொட்டு தேவரு மொக்காது என்னும் (பெருவிழா) அல்லது (அறவத்து கூடி மொக்காது ) என்னும் நிகழ்வு 60 வருடம் அல்லது ஒரு குறுப்பிட்ட வருட இடைவேளைகளில் நடத்த அனுமதி உண்டு.

கெத்திகை மனை கார்களும் அந்த மடமனையார் நடத்தும் பெருவிழாவில் கலந்து கொள்ளலாம். அதனால் தனியாக அவர்கள் பெருவிழா கொண்டாடுவது இல்லை. இதன் தாத்பரியம் என்னவென்றால் என்னதான் பிரிந்து சென்றாலும் 60 வருடம் கழித்தாவது ஒன்று சேருவது. தூய கன்னடத்தில் "கத்துகே " என்றால் பீடம் / மேடை என்று பொருள். அதை தான் நாம் கெத்திகை என்று கூறுகின்றோம்.

தேவரு மனை:- தேவரு மனை என்பது அம்மனை வீட்டில் வைத்து வழிபடும் முறை இந்த முறை பெரும்பாலும் சேலம் சுற்று பகுதிகளில் உள்ளது.


இந்த தகவல்கள் பொள்ளாச்சி செளடம்மன்  கோவிலில் தெளிவாக தகவல் பலகையில் இருக்கிறது. [ தகவல் திரு. பார்த்திபன் தீபு, பொள்ளாச்சி ]

தை அமாவாசையின் சிறப்பு:-

பொதுவாகவே அமாவாசை என்றாலே அம்மனுக்கு சிறப்பு என்பது அனைவரும் அறிந்ததே ஏனெனில் அன்னை சௌடேஸ்வரி அவதரித்ததே (ஆடி)அமாவாசை நாளில் தான் இதில் தைஅமாவாசைக்கு என்ன சிறப்பு என்னவென்றால் "தேவலரின் ஏழாவது அவதாரமான தேவதாசமையன் ஆமோத நகரில் இராமலிங்கேஸ்வரருக்கும் இராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கும் கோவில் கட்டி அங்கு பல்வேறு தடங்கலுக்கு பின்னர் கத்திகளால் தன்னையே வருத்தி தானும் தன் குலமக்களும் அழைத்து வந்த அன்னையை தான் கட்டிய கோவிலில் அமர்த்தி முதல் பூஜை நடத்தியது இந்த தை அமாவாசையில் தான், எனவே தான் நமது குல மக்கள் பல்வேறு பகுதிகளில் இந்நாளில் அன்னைக்கு விழா எடுக்கின்றனர் (குறிப்பாக ஒசக்கோட்டை ஸ்தலத்தில்) இதுவே தை அமாவாசையின் சிறப்பு என ஒரு செவி வழி செய்தி தெரிவிக்கின்றது.. 


DHARANI ANAND   [face book]

[courtesy: wikipedia]

   Rigveda Devanga (Div am ga) was the first ever Bhramin who (OHM) comes to this world to give clothes to human beings Thiruvalluvar in his eighth poem says one cannot reach PARAMAPATHA until one surrendered to this Bhramin(OHM).   


 Devanga discussion


Why is Devanga not considered as brahmins by all yet.still many are not aware that devangas are brahmins and tend see devangas as a very below grade caste.


REPLY
  
Devangas are not considered as brahmins because they were dealing with other communities for completion of silk cloth or cotton cloth.For silk cloth with sourastrians and for cotton cloth with dye manufacturers.Because of interaction with these people devangas used to consume non vegitarian food and some people used consume alcohol.SACRED thread was worn even without gayathri mantra hence devangas are not considered as brahmins. since their interaction was with lower classes of society they were also considered the sam



Down gradation devangas started after Manu where in he classified people depending on their jobs.It was during 300-400 BC division of people were made based on professsion.Devangas enjoyed the status of bhramin was lost after the division of people or introduction of caste based on profession.Devangas were weavers hence they were considered as artisans.Even today although devanga proclaim to be bhramins they are not.They are considered as BCM(backward community)in karnataka.They wear janevu sacred thread without sandhaya vandan.

by

Umeshyash

                                                      *****************************


  கத்தோலிக்க தேவாங்க சங்கம் :-        சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் தேவாங்க குல மக்களில் சிலர் கிறிஸ்தவர்களாக சத்தியமறையில் சேர்ந்திருக்கிறார்கள் இவர்கள் கோயமுத்துரில் உள்ள கருமத்தம்பட்டியில் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் நெசவு தொழில் செய்கிறார்கள் இவர்கள்  1956 ல் மும்பையிலும் ,1964 ல் கோவையில் உள்ள கருமத்தம்பட்டியிலும் "கத்தோலிக்க தேவாங்க சங்கம்" என்று ஆரம்பித்து இருக்கிறார்கள்


            இவர்களும் தேவாங்க சமுதாய வழக்கப்படி ஊர் செட்டியார்கள் இருக்கிறார்கள் .ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் தேதி புனித ஜெபமாலை அன்னைக்கு விண்ணேர்ப்பு திருவிழாவும் ,ஆண்டுவிழா கூட்டமும் "பூணுல் விழா" வைத்து பூணுல் அணிவதை ஒரு சடங்காக செய்து வருகிறார்கள்
                               

                               *********************************************************

            S.V. ராஜ ரத்தினம்,  செங்குந்தபுரம், கரூர்- 2. செல் எண் - 9443425240

மேலும் இது தொடர்பான பக்கங்கள்